'தலைவர் 170' படத்தின் ரஜினி கெட்டப்.. செம்ம ஸ்மார்ட்டா இருக்காரே..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருக்கும் நிலையில் சற்றுமுன் லைக்கா நிறுவனம் ரஜினியின் கெட்டப் குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள் தலைவர் கெட்டப் செம சூப்பராக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஸ்டைலிஷ் தோற்றத்தில் கூலிங் கிளாஸ் கண்ணாடி உடன் கருப்பு உடை அணிந்த ரஜினியின் கெட்டப் உள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதனை அடுத்து இந்த படம் ஜெய்லரை விட சூப்பர் ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் . இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், பிரபல தெலுங்கு நடிகர் ரானா ரகுபதி ஆகிய மூன்று பிரபலங்கள் நடிக்கின்றனர்
அதேபோல் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர்களும் நடிக்கின்றனர். ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கம், லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பு, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கெட்டப் என அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் பாசிட்டிவாக இருப்பதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி ஆகும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது.
Lights ☀️ Camera 📽️ Clap 🎬 & ACTION 💥
— Lyca Productions (@LycaProductions) October 4, 2023
With our Superstar @rajinikanth 🌟 and the stellar cast of #Thalaivar170🕴🏼 the team is all fired up and ready to roll! 📽️
Hope you all enjoyed the #ThalaivarFeast 🍛 Now it's time for some action! We'll come up with more updates as the… pic.twitter.com/gPUXsPmvEQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments