மீண்டும் அரசியல்.. பாஜகவில் சேருகிறாரா ரஜினியின் நெருங்கிய நண்பர்..!
- IndiaGlitz, [Thursday,February 01 2024]
ஏற்கனவே சொந்தமாக அரசியல் கட்சி தொடங்கி அதன் பின் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத ரஜினியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சிரஞ்சீவி மீண்டும் தீவிர அரசியலில் குதிக்க இருப்பதாகவும் அவர் விரைவில் பாஜகவில் சேர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி ’பிரஜா ராஜ்யம்’ என்ற அரசியல் கட்சியை கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கினார். ஆந்திர மாநிலத்தின் அடுத்த முதல்வர் அவர்தான் என்று கூறப்பட்ட நிலையில் 2009 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவர் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார் என்பதும் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பதவி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அவர் அரசியலில் இருந்து விலகி சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பாஜக தங்களது கட்சியை வளர்ப்பதற்கு பிரபலங்களை தேடிக்கொண்டிருந்தது.
அந்த வகையில் சமீபத்தில் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பு மற்றும் பத்மபூஷன் விருதுகளை சிரஞ்சீவிக்கு கொடுத்த நிலையில் அவர் பாஜகவுக்கு நெருக்கமாகி விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் பாஜகவில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் சிரஞ்சீவி பாஜகவில் இணைந்தால் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நல்ல வெற்றியை பெறலாம் என்று பாஜக தரப்பினர் கூறி வருகின்றனர்.