பாஜகவுக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா?

  • IndiaGlitz, [Thursday,March 17 2016]
கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்ததில் இருந்து கோலிவுட் திரையுலகினர் பலர் அந்த கட்சியில் சேர்ந்தவண்ணம் இருந்ததை பார்த்துவருகிறோம். அந்த வகையில் லேட்டஸ்ட்டாக இணைந்தவர் நடிகர் விஜயகுமார்.

பாஜகவில் சேர்ந்தவுடன் கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன் என்று மட்டும் விஜயகுமார் கூறியிருந்தால் இந்த செய்தியே வெளிவந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கட்சி மேலிடம் உத்தரவிட்டால் ரஜினியை கட்சிக்கு அழைத்து வருவேன் என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
ஐம்பது வருடங்களுக்கும் மேலாக கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் கலைஞருக்கும், வீடு தேடி வந்து ஆதரவு கேட்ட பிரதமர் மோடிக்கும் மசியாத ரஜினி, பால்ய நண்பர் என்பதற்காக விஜயகுமாரிடம் மசிகிற ஆளா என்ன? விஜயகுமாரின் இந்த பேட்டி பாஜக மேலிடத்தலைவர்களை வேண்டுமானால் திருப்தி அடைய செய்யும். ஆனால் இந்த தேர்தலை பொருத்தவரை ரஜினிகாந்த் யாருக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்றே அனைவராலும் கருதப்படுகிறது.

More News

ஷங்கரின் 2.0 படத்தில் எத்தனை பாட்டு. ராஜுமகாலிங்கம் விளக்கம்

ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டமும் பாடல்களும்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அவருடைய முதல் படமான ஜெண்டில்மேன்...

விக்ரம் படத்தை மிஸ் செய்த கருணாகரன்

சீயான் விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பை இயக்குனர் விஜய் மில்டன் கொடுத்ததாகவும்...

இறுதிக்கட்டத்தில் சுந்தர் சியின் அடுத்த படம்

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'அரண்மனை 2' படத்தையடுத்து அவர் நடித்து வந்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் முடிந்துவிட்டதாகவும்...

ஜெய்யின் 'புகழ்' : ஒரு முன்னோட்டம்

இளையதளபதி விஜய் நடித்த 'பகவதி' படத்தில் அவருடைய தம்பியாக கோலிவுட்டில் அறிமுகமான நடிகர் ஜெய், அதன்பின்னர் சென்னை 600028...

சென்னை போலீஸ் கமிஷனரிடம் நாசர் அளித்த புதிய மனு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படவுள்ள 'ஸ்டார் கிரிக்கெட்' போட்டியை நடத்த சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு அனுமதி கிடைத்துவிட்டதாக...