ரஜினியின் முதல் அரசியல் மாநாடு குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியல் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில் ரஜினி கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த சமயத்தில் கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்படும் என்றும் மதுரையில் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

நேற்று மதுரையில் நடைபெற்ற ரஜினி நற்பணி மன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ், ரஜினி ரசிகர்களிடையே பேசும்போது இதனை தெரிவித்தார். மேலும் தான்  12 வயதில் இருந்து ரஜினியின் ரசிகராக இருந்து வருவதாகவும், ரஜினியின் கட்சியில் தான் காவலனாக இருக்க காத்திருப்பதாகவும் தெரிவித்த ராகவா லாரன்ஸ், மதுரை மண் அரசியல் பிரவேசத்துக்கு முக்கியமான தளமாக இருப்பதால் அவர் மதுரையில் இருந்து அரசியலை தொடங்குவார் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.