போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: இலவச வேன் வசதி செய்து கொடுத்த ரஜினி ரசிகர்கள்

  • IndiaGlitz, [Thursday,January 11 2018]

தமிழக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் என்று எட்டாவது நாளாக நடைபெற்றதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த எட்டு நாள்களிலும் அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள் பெரும் அவதியடைந்தனர்

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் குறைந்த அளவு பேருந்துகளே ஓடியதால் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்து வந்தனர்

இந்த நிலையில் அவதியுற்றுள்ள பயணிகளுக்கு உதவும் வகையில் சென்னை திருவொற்றியூர் ரஜினி மன்றத்தை சேர்ந்தவர்கள் திருவொற்றியூரில் இருந்து சென்னை பிராட்வே வரை இலவச வேன் ஏற்பாடு செய்தனர். இதனால் இந்த வேனில் பயணம் செய்த பயணிகள் கட்டணம் இன்றி பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

ரஜினி ரசிகர்கள் போனறு மற்ற நடிகர்களின் ரசிகர்களும், சமூக நல அமைப்புகளும் இலவசமாக இல்லாவிட்டாலும் உரிய கட்டணத்தை பெற்றாவது பயணிகளுக்கு உதவலாமே என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

More News

ராம்கோபால் வர்மாவின் GST படத்தில் நிர்வாண காட்சிகள்

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் திரைப்படங்களும் சமூக வலைத்தள பதிவுகளும் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டிலும்,

மற்றவர்களை விட ஆண்டாளை அதிகம் நேசிப்பவர் வைரமுத்து: பிரபல இயக்குனர்

சமீபத்தில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்

பொங்கல் விடுமுறையில் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள்: தமிழக அரசு அனுமதி

பொங்கல் உள்பட விழா காலங்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதித்து வரும் நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தினத்திலும் திரையரங்குகளில் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலையா? தமிழக அமைச்சர் தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்

தேடியது தங்கப்புதையல், கிடைத்தது வைரமலை: ஆந்திர அரரின் அதிர்ஷ்டம்

ஒரே ஒரு வைரம் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் மதிக்கப்படும் நிலையில் ஆந்திர அரசுக்கு ஒரு வைரமலையே புதையலாக கிடைத்துள்ளது.