கோவை குலதெய்வம் கோவிலில் ரஜினியின் குடும்பம்.. என்ன விசேஷம்?

  • IndiaGlitz, [Sunday,September 17 2023]

கோவையில் ரஜினிகாந்தின் மருமகன் விசாகனின் குலதெய்வ கோவிலுக்கு ரஜினிகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சென்றுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வீர் என்ற மகன் கடந்த ஆண்டு பிறந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் குழந்தைக்கு கோவை அருகில் உள்ள விசாகனின் குலதெய்வ கோயிலில் மொட்டை போட்டு காது குத்தும் விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் சென்றார்.

கோவையில் அவர் தனது சம்மந்தியை சந்தித்து பேசிய பின்னர் ஸ்டார் ஹோட்டலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.