'எந்த 7 பேர்' என்பது குறித்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,November 13 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த ஒரு பேட்டி அளித்தாலும் அந்த பேட்டியில் உள்ள ஒரு சிறுகுறை பெரிதாக்குவது, அல்லது அவர் சொன்னதை திரித்து கூறி பரபரப்பை ஏற்படுத்துவது என்பது ஒருசில ஊடகங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. ரஜினிகாந்த் குறித்த எதிர்மறை செய்தி வெளியிட்டால் மட்டுமே ஊடகம் நடத்த முடியும் என்ற நிலையில் உள்ள ஒருசில ஊடகங்கள் இந்த வேலையை தொடர்ந்து செய்து வருகின்றன.

நேற்று ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் '7 பேர் விடுதலை குறித்த வழக்கில் குடியரசு தலைவரிடம் மத்திய அரசு ஒப்புதல் பெறாமல் இருப்பது ஏன்? என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு ரஜினிகாந்த் 'எந்த 7 பேர் என்று கேட்டதும்' ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் என்று நிருபர்கள் விளக்கம் அளித்தனர். பின்னர் அந்த கேள்விக்கு 'அதுகுறித்து எனக்கு தெரியாது' என்று பதிலளித்தார். அதாவது ''7 பேர் விடுதலை குறித்த வழக்கில் குடியரசு தலைவரிடம் மத்திய அரசு ஒப்புதல் பெறாமல் இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு தனக்கு தெரியாது என்று பதிலளித்தார். ஆனால் ஒருசில ஊடகங்கள் இதனை எடிட் செய்து '7 பேர் குறித்து எனக்கு தெரியாது' என்று ரஜினிகாந்த் கூறியதாக செய்தி வெளியிட்டன.

இந்த நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் சற்றுமுன்னர் விளக்கம் அளித்துள்ளார்,. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்று நான் கூறியதாக ஒரு மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர்; கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் நானும் தெளிவாக பதிலளித்திருப்பேன்' என்று கூறியுள்ளார்.

பேரறிவாளன் கடந்த ஆண்டு பரோலில் வந்தபோது அவரிடமும் அவரது தாயாரிடமும் தொலைபேசி தொடர்பு கொண்டு ரஜினி பேசினார் என்று பேரறிவாளனின் வழக்கறிஞர் பேட்டியளித்திருக்கும் நிலையில் ரஜினிக்கு 7 பேர் யாரென்றே தெரியாது என்பது போல் ஒருசில அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கூறுவது தேவையற்றது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

More News

ரஜினி தெரிவித்த கருத்து சரிதான்: முதலமைச்சர் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு நிமிடங்கள் பேட்டி அளித்தால் ஒருசில ஊடகங்கள் அந்த பேட்டியை திரித்து செய்தியாக வெளியிட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடத்தும் நிலை காணப்படுகிறது.

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ரியல் சுந்தர் ராமசாமி

சமீபத்தில் வெளியான 'சர்கார்' படத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் சுந்தர் ராமசாமி என்ற ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ கேரக்டரில் நடித்த விஜய், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை

சூப்பர் ஹீரோக்களின் படைப்பாளி ஸ்டேலீ காலமானார்.

உலகப்புகழ் பெற்ற சூப்பர் ஹீரோக்களை காமிக்ஸ்ஸில் உருவாக்கிய ஸ்டேன் லீ என்ற உலகப்புகழ் பெற்ற கிரியேட்டர் உடல்நிலை குறைபாடு காரணமாக காலமானார்

கிறிஸ்துமஸ் ரிலீஸ் பட்டியலில் குவியும் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அடுத்த பெரிய படங்களின் ரிலீஸ் கிறிஸ்துமஸ் திருநாளில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் 'பாகுபலி' இயக்குனருடன் இணையும் பிரபலம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களிலும் தமிழ் பதிப்பின் வசனங்களை எழுதியவர் மதன்கார்க்கி என்பது தெரிந்ததே.