close
Choose your channels

யோகி காலில் விழுந்தது ஏன்? சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விளக்கம்..!

Tuesday, August 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்ற போது அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

51 வயது யோகி ஆதித்யநாத் காலில் 71 வயது ரஜினிகாந்த் விழுவதா? என நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் யோகி ஒரு சந்நியாசி, இந்து மத துறவி, அந்த அடிப்படையில் அவர் காலில் எழுந்திருப்பார் என ரஜினி தரப்பில் இருந்து கூறப்பட்டது.

இந்த நிலையில் இமயமலை பயணம், ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அவர் சென்னை விமான நிலையத்தில் யோகி காலில் விழுந்தது குறித்து கூறிய போது என்னைவிட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசி காலில் விழுவது எனது வழக்கம், அதைத்தான் செய்தேன் என்று விளக்கம் அளித்தார்.

மேலும் ‘ஜெயிலர்’ படத்தை வெற்றிப் படமாக்கிய தமிழக ரசிகர்களுக்கு தனது நன்றி என்றும் இந்த படத்தில் சிறப்பாக பணிபுரிந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.