ஆன்மீக அரசியல் என்றால் என்ன? ரஜினிகாந்த் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,January 02 2018]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு தான் ஆன்மீக அரசியல் வழியில் செயல்படவுள்ளதாக அறிவித்தார். இதுகுறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆன்மீகமும் அரசியலும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது என்றும், ரஜினிகாந்த்தின் அறிவிப்பு குழப்பத்தை தருவதாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ஆன்மீக அரசியல் என்றால் என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்தார்.' உண்மையான, நேர்மையான, நாணயமான சாதி, மத, சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மீக அரசியல் என அவர் விளக்கமளித்தார். மேலும் ஆன்மீகம் என்பது ஆத்மாவுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்

ரஜினியின் இந்த விளக்கத்தை அடுத்து ஆன்மீக அரசியல் குறித்து விமர்சனம் செய்தவர்கள் அவர் மீதான விமர்சனத்தை நிறுத்தி கொள்வார்களா? அல்லது மேலும் விமர்சனம் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர் சந்திப்பு: ரஜினிக்கு ஆதரவு என அறிவிப்பா?

ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வரும் 4ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

மண்ணின் மனம் மாறாத 'மதுரவீரன்': டிரைலர் விமர்சனம்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள 'மதுரவீரன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது.

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' சென்சார் தகவல்கள்

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு UA'  சான்றிதழ் அளித்துள்ளனர்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ரஜினி-கமல் சந்திப்பு

வரும் 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழாவில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கின்றனர்.

ஆன்மீக அரசியல் இங்கு எடுபடாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

திராவிட பாரம்பரியம் மிக்க மண்தான் நமது தமிழகம். திராவிடத்திற்கு மாற்றாக எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது இங்கு சாத்தியமில்லை. அதனால் ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியல் எதுவும் இங்கு எடுபடாது,