ஏப்ரல் 14ல் கட்சி பெயர், கொடி அறிவிக்கப்படுமா? ரஜினிகாந்த் பதில்
- IndiaGlitz, [Tuesday,March 20 2018]
கடந்த சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட பெயர்களை ஒன்றை அவர் தேர்வு தனது கட்சியின் பெயரை ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் அறிவிக்கவுள்ளதாகவும், அன்றைய தினம் சென்னை அல்லது திருச்சியில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டதில் கட்சியின் கொடியை ஏற்றுவார் என்றும் செய்திகள் வெளிவந்தது.
இந்த நிலையில் இதுகுறித்த கேள்விக்கு கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், 'நான் கட்சியின் பெயரை அறிவிக்கும் தினம் குறித்து அதிகாரபூர்வமாக விரைவில் தெரிவிக்கின்றேன் என்று கூறினார்.
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் இன்னும் முழுமையாக தேர்வு செய்யப்படவில்லை என்றும், இன்னும் 16 மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ரஜினிகாந்த் தனது பேட்டியில் தெரிவித்தார்..