'முத்து'க்கு பின் 'கபாலி'க்கு கிடைத்த பெருமை

  • IndiaGlitz, [Saturday,February 20 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம்தான் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றது. இதேபோல் மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெறுகிறது 'கபாலி' திரைப்படம்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. முதல்கட்டமாக அமெரிக்க ரிலீஸ் உரிமை ரூ.8 கோடிக்கு விற்பனையாகிவிட்ட நிலையில் அடுத்தகட்டமாக மற்ற நாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழக ரிலீஸ் உரிமையின் வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றன,.
இந்நிலையில் இந்த திரைப்படம் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் படமாக்கும்போது அந்த பகுதி மக்கள் ரஜினியை பார்க்க பெருமளவில் குவிந்தனர். எனவே அந்த பகுதியில் வாழும் சுமார் 30 லட்சம் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தற்போது இந்த படம் மலாய் மொழியில் டப் செய்யப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.