நேற்று 'தர்பார்' ரிலீஸ், இன்று முக்கிய ஆலோசனை: ரஜினியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில் இன்று ’ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று வெளியான ‘தர்பார்’ திரைப்படம் பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது. நீண்ட பொங்கல் விடுமுறை இருப்பதால் இந்த படம் நல்ல ஓபனிங் வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ‘தர்பார்’ திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் இன்று சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிக்க தேவையான அனைத்து பணிகளையும் செய்து முடித்து விட்ட நிலையில் விரைவில் அவர் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசியல் கட்சி தொடங்குவது எப்போது என்பது குறித்து ஆலோசனை இன்று நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதற்கு முன்னர் ஆறு மாதங்களுக்கு முன்னரே கட்சி ஆரம்பித்தால் தான் கட்சியின் பெயரை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்பதால் விரைவில் ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments