நேற்று 'தர்பார்' ரிலீஸ், இன்று முக்கிய ஆலோசனை: ரஜினியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில் இன்று ’ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று வெளியான ‘தர்பார்’ திரைப்படம் பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது. நீண்ட பொங்கல் விடுமுறை இருப்பதால் இந்த படம் நல்ல ஓபனிங் வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ‘தர்பார்’ திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் இன்று சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிக்க தேவையான அனைத்து பணிகளையும் செய்து முடித்து விட்ட நிலையில் விரைவில் அவர் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசியல் கட்சி தொடங்குவது எப்போது என்பது குறித்து ஆலோசனை இன்று நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதற்கு முன்னர் ஆறு மாதங்களுக்கு முன்னரே கட்சி ஆரம்பித்தால் தான் கட்சியின் பெயரை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்பதால் விரைவில் ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் வரலாற்றுத் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக

'சசிகலா' குறித்த சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்: லைகா தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில்

இனி நீங்க Facebook பார்க்க போற விதமே மாற போகுது... டோட்டல் ரீடிசைன்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் புதிய பேஸ்புக் மறுவடிவமைப்பைப் பெறுவார்கள் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

Samsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..?! இந்தியாவில் வெளியாகிறது.. Samsung Galaixy Note 10 Lite..!

Galaxy S10 Lite உடன் Samsung Galaxy Note 10 Lite விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபிகா படுகோன் படத்திற்கு ஒரு தியேட்டரையே புக் செய்த முன்னாள் முதல்வர்!

ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததற்காக தீபிகா படுகோனேவின் 'சப்பக்' என்ற திரைப்படத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும்