செளந்தர்யா ரஜினிக்கு 2வது ஆண் குழந்தை.. பெயர் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,September 12 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தொழிலதிபரும் நடிகருமான விசாகன் வணங்காமுடி என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்

இந்த நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமான நிலையில் அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ’கடவுளின் அபரிமிதமான கருணையுடனும், எங்கள் பெற்றோர் ஆசீர்வாதத்துடனும் வேத் தம்பியை வரவேற்பதில் விஷாகன், வேத் மற்றும் நானும் மகிழ்ச்சியடைகிறோம். ’’வீர் ரஜினிகாந்த்’ வனங்கமுடி என்பது தான் குழந்தையின் பெயர். பிரசவத்துக்கு உதவிய மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.