விவாகரத்து விஷயத்தில் செளந்தர்யா ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு.
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளையமகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக கணவர் அஸ்வினிடம் இருந்து பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியுள்ளது. இதை செளந்தர்யா தனது சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று விவாகரத்து கோரி செளந்தர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் - செளந்தர்யா திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த தம்பதிக்கு வேத் என்ற குழந்தை உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் செளந்தர்யா, தனுஷ் நடிக்கவுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணியில் அவர் தற்போது தீவிரமாக உள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments