டெல்லியில் 10 கிமீ ஓடிய ரஜினியின் மகள்: வைரல் வீடியோ

தலைநகர் டெல்லியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 10 கிலோமீட்டர் ஓடிய வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கே அதிகாலை எழுந்து டெல்லியின் சாலையில் 10கிமீ நடந்தும் ஓடியும் உடற்பயிற்சி எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் டெல்லி சாலைகளில் சென்ற போது சில நபர்களை சந்தித்து நலம் விசாரித்த காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. குறிப்பாக சாலையோர துப்புரவு தொழிலாளி ஒருவரை நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 10 கிலோமீட்டர் ஓடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த அனுபவம் குறித்து கூறியிருப்பதாவது:

சில நேரங்களில் உங்கள் வழக்கத்தை மாற்றி கொள்வது நல்லது
பூங்காவில் ஒரு நடை அல்லது
மூடுபனியில் ஒரு ஜாக்..
டெல்லியின் அதிகாலை அனுபவம் அருமையாக இருந்தது..
டெல்லியில் 10 கிமீ நடை மற்றும் ஓட்டம்!