வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் ரஜினி மகள்? வைரல் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு உடற்பயிற்சி பிரியை என்பதும் அவர் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார் என்பது அவரது ஃபாலோயர்கள் அறிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் இந்த வீடியோவில் இருந்து அவர் எவ்வளவு கடினமான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் என்பதையும் பார்க்க முடிகிறது.

இந்த வீடியோவில் அவர் திங்கட்கிழமை காலை என்றாலே எனக்கு உத்வேகம் உள்ளிருந்து வருகிறது என்றும், வெளியில் இருந்து எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் என்னால் வாழ முடியும் என்றும் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.