முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் டான்ஸ் ஆடிய ரஜினிகாந்த்.. சினிமாவில் கூட இப்படி ஆடலையே..!

  • IndiaGlitz, [Saturday,July 13 2024]

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த திருமணத்திற்கு திரை உலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய பிரபலங்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நேற்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுவதாகவும் இதற்காக 1700 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் , அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யா, அவருடைய கணவர் விசாகன் உள்பட ரஜினி குடும்பத்தினர் கலந்து கொள்ள மும்பை சென்றனர் என்பதும் இந்த திருமண விழாவில் ரஜினி குடும்பத்தினர் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மணமகன் ஆனந்த் அம்பானி அருகே ரஜினிகாந்த் நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் டான்ஸ் ஆடினார். ரஜினியின் டான்ஸை பார்த்து அருகில் உள்ளவர்கள் ஆச்சரியப்பட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினிகாந்த் பொதுவாக எந்த விழாவிலும் இவ்வாறு டான்ஸ் ஆடியது கிடையாது, ஆனால் முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் அவர் டான்ஸ் ஆடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் கூட இப்படி ரஜினி டான்ஸ் ஆடியதில்லை என ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

More News

சபாஷ் சரியான போட்டி.. நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2', த்ரிஷாவின் 'மாசாணி அம்மன்'..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' என்ற திரைப்படம் 2020 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

தேவைப்பட்டால் எல்லாவற்றையும் சோஷியல் மீடியாவில் போடுவேன்: ரச்சிதாவை மிரட்டுகிறாரா தயாரிப்பாளர்?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தனது சமூக வலைதளத்தில் பிக்பாஸ் ரச்சிதாவை எல்லாவற்றையும் சோசியல் மீடியாவில் போட வேண்டிய நிலை ஏற்படும் என மிரட்டல் எடுக்கும் வகையில் செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சனி வக்ர பெயர்ச்சி 2024 பலன்கள்: உங்கள் ராசிக்கு என்ன பலன்கள்? | Dr. Arun Karthik Financial Astrologer

இந்த வீடியோவில், சிறந்த நிதி ஜோதிடர் Dr. Arun Karthik அவர்கள், 2024 ஆம் ஆண்டு சனி வக்ர பெயர்ச்சியின் பலன்களை பற்றி விரிவாக விளக்குகிறார்.

'இந்தியன் 2' ரூ.1500 கோடி வசூல் செய்யும்.. தேசிய விருது உறுதி.. தமிழ் காமெடி நடிகர்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில்

பிக்பாஸ் லாஸ்லியா நாயகியாக நடிக்கும் படம்.. அட்லி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா நாயகி ஆக நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அட்லி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர்