'நடக்க வேண்டிய நேரத்துல கரெக்டா நடக்கும்.. ரஜினியின் 'கூலி' படத்தின் மாஸ் அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் முக்கிய பணியாற்றும் ஒருவர் மாஸ் அப்டேட் கொடுத்த நிலையில் அந்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் உருவாக இருக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்தி வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதை எழுதும் குழுவில் உள்ள சந்துரு அன்பழகன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவருடைய உதவி இயக்குனர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ‘கூலி’ படத்தின் முதல் பாகத்தின் திரைக்கதை எழுதும் பணி முடிந்து விட்டதாகவும் அடுத்தபடியாக இரண்டாம் பாகத்தின் திரைக்கதை எழுதும் பணியை தொடங்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பதிவில் அவர் ’எப்போ நடக்கணும், எப்படி நடக்கணும்னு யாருக்கும் தெரியாது, ஆனால் நடக்க வேண்டிய நேரத்துல கரெக்டா நடக்கும்’ என்ற பஞ்ச் டயலாக்கை பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே ’மாநகரம்’ ’மாவீரன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் என்பதும் தற்போது ‘கூலி’ படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கூலி’ படத்தின் மாஸ் அப்டேட் உடன் கூடிய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Eppo Nadakkum... Epdi Nadakkum nu Yaarukum theriyaadhu... Aana Nadakka Veandiya Nerathula Correct ah Nadakkum...#Coolie 1st half -🔏
— Chandhru Anbazhagan (@Dir_Chandhru) May 5, 2024
Kicked to collaborate with you @Dir_Lokesh
🤝 Assoc Directors @santhoshkrishnn &@immanuel5233
Writing Diaries #Maanagaram #Maaveeran #Coolie pic.twitter.com/Z9zJArqpWo
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout