சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் தங்கமான பரிசை பெற்ற 'அருவி' அதிதிபாலன்
- IndiaGlitz, [Saturday,December 23 2017]
இந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகிய 'அருவி' படத்திற்கு தொடர்ச்சியாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் பெரும் ஆதரவுடன் ஓடி வரும் இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களை மட்டுமின்றி கோலிவுட் திரையுலக பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அருவி' இயக்குனர் அருண்பிரபுவை போனில் அழைத்து பாராட்டினார் என்ற செய்தியையும் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி அருவி இயக்குனர் அருண்பிரபு, அருவி நாயகி அதிதிபாலன் ஆகிய இருவருக்கும் தங்க செயின்களை பரிசளித்துள்ளார். சூப்பர் ஸ்டாரிடம் இருந்து தங்கமான பரிசை பெற்ற இருவரும் ஆஸ்கார் விருதை பெற்றது போன்ற உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதை சொல்லவும் வேண்டுமா?