அமித்ஷாவுக்கு ரஜினி வாழ்த்து: காஷ்மீர் விவகாரத்திற்கு பாராட்டு!

  • IndiaGlitz, [Sunday,August 11 2019]

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இன்று சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

இந்த நிலையில் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் பேசியபோது, 'ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷா திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது என்றும், நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது என்றும் பாராடினார். மேலும் அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணன் - அர்ஜீனன் போன்றவர்கள் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

மேலும் வெங்கையா நாயுடு மிகச்சிறந்த ஆன்மீகவாதி என்றும், அவர் தப்பித்தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார் என்றும் ரஜினிகாந்த் பேசினார். இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சாக்சியை மறந்த கவின், முகினை மறந்த அபிராமி: பிக்பாஸ் வீட்டில் பிரளயமா?

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் டாப் 3 இடங்களை பெறுபவர் யார் என்பது குறித்த கமல்ஹாசனின் கேள்விக்கு கவின் பதிலளிக்கையில்

தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது. காஷ்மிர் விவகாரம் குறித்து பிரபல நடிகை

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த 370வது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் , லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது.

அத்திவரதர் அருளால் சிம்பு திருமணம்: டி.ராஜேந்தர் பேட்டி

கடந்த ஒன்றரை மாதங்களாக காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதியில் இருந்து

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்: கவின், ஷெரின் அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும் படலம் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் சாக்சி, அபிராமி மற்றும் லாஸ்லியா ஆகிய மூவர் எவிக்சன் பட்டியலில் இருந்தனர்.

கீர்த்திசுரேஷூக்கு வாழ்த்து தெரிவித்த புதிய விஐபி தோழி!

நேற்று 66வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகை கீர்த்திசுரேஷுக்கு 'மகாநதி' படத்தில் சிறப்பாக நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.