'ரைட்டர்' படம் பார்த்து ரஜினிகாந்த் சொன்னது என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புதிதாக திரையுலகுக்கு வரும் இளம் இயக்குநர்கள் இயக்கும் படங்கள் உள்பட நல்ல திரைப்படங்கள் வெளிவரும்போது மனதார அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நேரில் அழைத்தும், தொலைபேசி மூலமும் பாராட்டு தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

சமீபத்தில் வெளியான ’மாநாடு’, ‘ராக்கி’ உள்பட பல திரைப்படங்களை அவர் பாராட்டிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான சமுத்திரகனியின் ’ரைட்டர்’ படத்தை பார்த்து படக்குழுவினருக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

’ரைட்டர்’ பிரமாதமான படம் என்றும், எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றும், எல்லோரும் ரொம்ப சூப்பராக நடித்திருக்கிறார்கள் என்றும், குறிப்பாக சமுத்திரக்கனி சிறப்பாக நடித்திருக்கிறார் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப்புக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்றும் அவர் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் சமுத்திரகனிக்கு போன் செய்து அவரை தனிப்பட்ட முறையில் பாராட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் பாராட்டியதை அடுத்து ’ரைட்டர்’ படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்தின் 'வலிமை' ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா?

அஜித் நடித்த 'வலிமை' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் கசிந்துள்ளது

இதெல்லாம் நான் எங்கம்மா கிட்ட கேட்டதே கிடையாது: ராஜூவின் நெகிழ்ச்சியான பேச்சு

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தற்போது இந்த வீட்டில் இருந்த 90 நாட்களில் தாங்கள் கற்றுக் கொண்டது என்ன என்பது குறித்து கூறி வருகின்றனர் 

 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்த நடிகையை அறிமுகம் செய்த கெளதம் மேனன்!

சிம்பு நடிப்பில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மும்பை உள்பட ஒரு சில பகுதிகளில் விறுவிறுப்பாக

கப்பாவை தொடர்ந்து செஞ்சூரியனில் சரித்திரம் படைத்த இந்திய அணி!

இந்த ஆண்டின் துவக்கத்தில் கப்பா மைதானத்தில் விளையாடிய

கோவாவில் உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரின் சிலை… எதற்கு தெரியுமா?

கோவா மாநிலத்தின் தலைநகரான பானாஜியில் உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக