வில்லன் யார்? 'ராட்சசன்' விஷ்ணுவிடம் ரஜினி கேட்ட கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷ்ணுவிஷால், அமலாபால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. தமிழில் ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில் படம் வெளிவந்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே கோலிவுட் திரையுலகினர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் விஷ்ணுவை தொலைபேசி மூலம் பாராட்டியது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
'பெண்டாஸ்டிக், பெண்டாஸ்டிக், பெண்டாஸ்டிக், நடிப்பு தூள் கிளப்பிட்டிங்க, போலீஸ் யூனிபார்ல செம்ம ஃபிட் என்று ரஜினி கூறியதாகவும், மேலும் 'வில்லன் யாரு? சூப்பர் பாடி லேங்க்வேஜ் என்று வில்லன் நடிப்பை பாராட்டியதாகவும், டைரக்டர் உங்க குழு சூப்பர் என்று கூறியதாகவும் விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
வளர்ந்து வரும் திறமைமிக இளைஞர்களை ரஜினிகாந்த் தொடர்ந்து பாராட்டி வரும் நிலையில் 'ராட்சசன்' படத்திற்கு அவரிடம் இருந்து கிடைத்த பாராட்டால் படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
When d one n only superstar @rajinikanth surprises u with a phone cal ,u jump in joy :) #Ratsasan some of d words he used ‘FANTASATIC,FANTASTIC,FANTASTIC’ ‘Nadippu dhool kelapitingu’ ‘police unifrom le semma fit’ ‘villain yaaru? super body language’ ‘dir n unga combo super’
— VISHNUU VISHAL - VV (@vishnuuvishal) October 23, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com