கமல்ஹாசன் பெற்ற ஓட்டுக்கள் குறித்து ரஜினிகாந்த் கருத்து!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகம் முழுவதும் சுமார் 4% வாக்குகளை பெற்றுள்ளது. குறிப்பாக சென்னையின் மூன்று தொகுதிகளிலும் கோவை, மதுரை போன்ற தொகுதிகளிலும் ஒரு லட்சத்திற்கு அதிகமாகவும், ஒரு லட்சத்தை நெருக்கியும் வாக்குகளை பெற்றிருந்தது.

இந்த நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது கமல்ஹாசனின் கட்சி பெற்ற ஓட்டுக்கள் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், 'கட்சி ஆரம்பித்த 14 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து கிட்டத்தட்ட 4% ஓட்டுக்கள் வாங்கியிருப்பது ஒரு பெரிய விஷயம், அவருக்கு எனது பாராட்டுக்கள்' என்று கூறினார்.

மேலும் அகில இந்திய அளவில் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் போல் மோடியும் வலுவான தலைவராக விளங்கி வருவதாக தெரிவித்தார்.
 

More News

திரையரங்கு உரிமையாளர்களின் அதிரடி முடிவு: கமல், விஷால், கார்த்தி ஏற்பார்களா?

திரையரங்கு உரிமையாளர்கள் இனிவரும் காலங்களில் வசூல் தொகையை விநியோகிஸ்தர்களுக்கு பிரித்து கொடுப்பது குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

தமிழகத்தில் மோடி தோல்வி ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்

நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மட்டும் படுதோல்வி அடைந்தது.

சூர்யாவுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் என்ன சம்பந்தம்? என்.ஜி.கே குறித்த சுவாரஸ்ய தகவல்!

சூர்யா நடித்த 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது.

தொலைந்த கணவரை கண்டுபிடிக்கும் நடிகை நந்திதா!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நந்திதா நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் ஏசி கட்! பயணிகள் அதிருப்தி

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிய மெட்ரோ ரயில் சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.