காவல்துறையின் வரம்பு மீறிய மிருகத்தனமான செயல்: தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினிகாந்த்
- IndiaGlitz, [Wednesday,May 23 2018]
நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வன்முறையால் போலீசார் துப்ப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 11 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் காவல்துறையினர்களின் அத்துமீறிய செயலை கடுமையாக கண்டித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் உளவுத்துறை மற்றும் தமிழக அரசின் தோல்வியை காட்டுகிறது. காவல்துறையின் வரம்பு மீறிய மிருகத்தனமான செயலை கண்டிக்கின்றேன். ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் ஆல்ட்சியம், உளவுத்துறை உள்பட மொத்த நிர்வாகத்தின் தோல்வியையே காட்டுகிறது. இந்த போராட்டத்தில் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்திலும் மெரினா நினைவேந்தல் போராட்டத்திலும் காவல்துறையினர்களுக்கு ஆதரவாக கருத்து கூறிய ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டத்தில் மட்டும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SterliteProtest pic.twitter.com/XPKov0Ln2O
— Rajinikanth (@rajinikanth) May 23, 2018