'கூலி' படத்தில் ரஜினியின் கேரக்டர்.. 'தளபதி' படத்துடன் கனெக்சனா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் கேரக்டர்கள் குறித்த அறிவிப்புகள் கடந்த சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் உபேந்திரா, காளிஷா என்ற சத்யராஜ், ராஜசேகர் என்ற கேரக்டரிலும், ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற கேரக்டரிலும் நாகார்ஜுனா சைமன் என்ற கேரக்டரிலும் சோபின் சாஹிர், தயால் என்ற கேரக்டரிலும், நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரக்டர் தேவா என்று அறிவித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’தளபதி’ திரைப்படத்தில் மம்முட்டி நடித்த கேரக்டர் தான் தேவா என்பதும் ரஜினி நடித்த சூர்யா கேரக்டரின் நெருக்கமான நண்பர் தான் தேவா கேரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ’தளபதி’யின் தேவா கேரக்டரில் ரஜினி நடித்திருப்பதை அடுத்து தளபதி படத்துடன் ’கூலி’ படம் கனெக்சன் ஆகுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் விடை படம் வெளிவந்தால் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
The wait is over!
— Sun Pictures (@sunpictures) September 2, 2024
Introducing Superstar @rajinikanth as Deva, from the world of #Coolie😎🔥@Dir_Lokesh @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/6cD0V8wDDa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments