'கூலி' படப்பிடிப்பில் ஓணம் கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. ஜாலியான வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பின்போது ஓணம் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய 'வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் அக்டோபர் 10ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ’மனசிலாயோ’ என்ற பாடல் வெளியானது என்பதும் ரஜினி மற்றும் மஞ்சு வாரியர் டான்ஸ் காட்சிகள் கொண்ட இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் ஜாலியாக டான்ஸ் ஆடிக்கொண்டே ஓணம் பண்டிகை கொண்டாடிய வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது. ‘வேட்டையன்’ பாட்டுக்கு ரஜினி டான்ஸ் ஆடிய காட்சிகள் இந்த வீடியோவில் இருக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, ஷோபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையில், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Superstar celebrating Onam in style from the sets of #Coolie 🔥💥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/VhVNhmS2hI
— Sun Pictures (@sunpictures) September 15, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com