துக்ளக் விழாவில் ரஜினி பேசியது குறித்த வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்டு பேசியபோது அவர் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக விமர்சனங்கள் எழுந்தன

இதுகுறித்து ரஜினி மீது திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அமைப்பு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 9-ஆம் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்கள் மற்றும் திராவிட விடுதலை கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு ரஜினிக்கு ஆதரவாக வருமா? அல்லது ரஜினி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை வரும் 9ஆம் தேதி வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்