படப்பிடிப்பில் இருக்கும் போது விஜயகாந்த் மறைவு செய்தி கேட்ட ரஜினி.. உடனடியாக செய்த செயல்..!

  • IndiaGlitz, [Thursday,December 28 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டதும் உடனடியாக ’வேட்டையன்’ படத்தின் இன்றைய படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் மற்றும் புரட்சி கலைஞர் விஜயகாந்த் இன்று காலை காலமான நிலையில் அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது. அங்கு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தூத்துக்குடியில் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது அவருக்கு விஜயகாந்த் மரணம் குறித்த தகவல் தெரிந்தது. உடனடியாக அவர் இன்றைய படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்ப உள்ளதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் அவர் சென்னை திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் நேராக அவர் தேமுதிக தலைமை அலுவலகம் சென்று விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை மாலை தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் விஜயகாந்த் உடல் தகன நிகழ்விலும் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருப்பதாக அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

Immerse Yourself in the Melodies of Vijayakanth!

Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!

Listen Now

More News

Kill or Stay.. டிக்கெட் டு ஃபினாலேவில் புதிய டாஸ்க்.. வெளியேறுவது யார் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தரும் புள்ளிகள் அடிப்படையில் அதிக புள்ளிகள்

விஜயகாந்த் உடல் அடக்கம் எங்கே எப்போது? குடும்பத்தினர் அறிவிப்பு..!

தேமுதிக தலைவர் இன்று காலை 6.10 மணிக்கு காலமான நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

எதற்கும் அஞ்சாத துணிச்சல் உடையவர் விஜயகாந்த்: கமல்ஹாசன் இரங்கல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சற்றுமுன்

டாஸ்க்கில் நிக்சன் செய்த பிராடுத்தனம்.. உதவி செய்த விஜய் வர்மா? கமல்ஹாசன் கண்டிப்பாரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்க்கில் நிக்சன் வெற்றி பெற்ற நிலையில் அவர் பிராடுத்தனம் செய்துதான் வெற்றி பெற்றுள்ளதாக பார்வையாளர்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவதை

'பார்க்கிங்', 'அன்னபூரணி' உள்பட ஓடிடியில் இந்த வார திரைப்படங்கள்..!

திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதும் ஓடிடியில் சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.