சிவகார்த்திகேயனை நெகிழ வைத்த ரஜினியின் அழைப்பு

  • IndiaGlitz, [Tuesday,September 22 2015]

கடந்த ஞாயிறு அன்று திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு விழாவிற்காக மதுரை சென்ற நடிகர் சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் தாக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு ஒன்றும் இல்லை என்றும் தான் நலமாக இருப்பதாக சிவகார்த்திகேயனும், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கமல்ஹாசன் தரப்பில் இருந்து கூறப்பட்டாலும், மதுரை சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்கியதாக தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் குறித்து பதிவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதுரையில் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொண்டாராம். மேலும் பொது இடத்திற்கு செல்வதை குறைத்து கொள்ளுமாறும், பேட்டி கொடுக்கும்போது கவனமாக இருக்குமாறும் சிவகார்த்திகேயனுக்கு ரஜினி அறிவுரை கூறியதாகவும் கூறப்படுகிறது.

மதுரையில் நடந்த சம்பவம் குறித்து சூப்பர் ஸ்டாரே நேரில் தன்னை தொடர்பு கொண்டு விசாரித்ததில் நெகிழ்ந்து போயுள்ளாராம் சிவகார்த்திகேயன்.

More News

சமூக வலைத்தளத்தில் இருந்து சிம்பு திடீர் விலகல். காரணம் என்ன?

நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு பெரும் இடைவெளியில் படங்கள் கொடுத்து கொண்டிருந்தாலும், சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வபோது தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர்...

சூர்யாவின் 'பசங்க 2' படத்தை அடுத்து '24' படப்பிடிப்பும் முடிந்தது

'அஞ்சான்', 'மாஸ்' படங்களை அடுத்து சூர்யா ஒரே நேரத்தில் 'பசங்க 2' மற்றும் '24' ஆகிய படங்களில் நடித்து வந்தார்....

'தனி ஒருவன்' தயாரிப்பு நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை

சமீபத்தில் வெளியான கோலிவுட் திரைப்படங்களில் எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 'தனி ஒருவன்' என்பதை யாராலும் மறுக்க முடியாது...

இளையதளபதியுடன் இணைந்த பிரபல நடிகையின் மகள்

தமிழ், தெலுங்கு, இந்தி என முக்கிய மொழிகளில் இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்...

அஜீத்தின் அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள். ஒரு பார்வை

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படும் அஜீத்தின் வசன உச்சரிப்பே மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்கும். அதிலும் அவர் பேசும் பஞ்ச் வசனங்கள் அதிர வைக்கும்...