கொடுத்த வாக்குறுதியை மூன்றே மாதங்களில் நிறைவேற்றிய ரஜினிகாந்த்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் கலைஞானம் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டபோது, ‘கலைஞானம் அவர்கள் வாடகை வீட்டில் வசிப்பது தனக்கு தெரியாது என்றும், அவருக்கு சொந்த வீடு ஒன்றை தானே வாங்கி கொடுக்க உள்ளதாகவும் வாக்களித்தார்.
இந்த நிலையில் வாக்களித்தபடியே கலைஞானம் அவர்களுக்கு சொந்த வீடு ஒன்றை ரஜினிகாந்த் வாங்கி கொடுத்துள்ளார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இதனையடுத்து கலைஞானம் குடும்பத்தினர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கொடுத்த வாக்குறுதியை அக்டோபர் மாதத்தில் நிறைவேற்றி மூன்றே மாதங்களில் தனது வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞானம் தயாரித்த ‘பைரவி’ படத்தில் தான் ரஜினிகாந்த் முதல்முறையாக ஹீரோவாக நடித்தார் என்பதும், அவருடைய திரையுலக வாழ்வின் முன்னேற்றத்திற்கு கலைஞானம் அஸ்திவாரமாக இருந்துள்ளார் என்பதும், அதற்கு நன்றிக்கடனாக தற்போது சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினிகாந்த், கலைஞானம் அவர்களுக்கு வீடு வாங்கி கொடுத்து உதவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments