ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது எப்போது? அண்ணன் சத்தியநாராயணா ராவ் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,November 29 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்தபோது 'போர் வரும்போது அரசியல் அறிவிப்பு வரும்' என்று கூறினார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக தமிழருவி மணியன் உள்பட அவருக்கு நெருக்கமான அரசியல் தலைவர்களும் அவ்வப்போது பேட்டி கொடுத்தனர்.

இந்த நிலையில் இன்று ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ், ரஜினியின் அரசியல் கட்சி குறித்து கூறியபோது, ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர்12ல் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகாது, ஆனால் அதே நேரத்தில் அரசியல் கட்சி அறிவிப்பை அவர் ஜனவரியில் அறிவிப்பார். அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் அன்புக்கும் உரியவர் ரஜினிகாந்த். ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லதே செய்வார், மக்கள் ரஜினியை தேர்ந்தெடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசனும் அதே ஜனவரியில் தான் கட்சி குறித்த அறிவிப்பை அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார். எனவே ஜனவரியில் வரும் அறிவிப்பு ரஜினி, கமல் ஆகிய இருவரின் தனித்தனியான அறிவிப்பா? அல்லது இணைந்த அறிவிப்பா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்