close
Choose your channels

பாராளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? அண்ணன் சத்தியநாராயண ராவ் தகவல்..!

Wednesday, August 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் ரஜினியின் ஆதரவு யாருக்கு என ஊடகங்கள் கேள்வி எழுப்புவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு தருவார் என்ற கேள்விக்கு அவருடைய சகோதரர் சத்தியநாராயண ராவ் பதில் அளித்துள்ளார்.

ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் இன்று விழுப்புரம் வந்தார். ரஜினியின் ஆதரவாளர் ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் அதன் பின்னர் சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் வீட்டிற்கு சென்று அவரது தந்தை பழனிவேல் மற்றும் தாயார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் இஸ்ரோவின் இயக்குனராக செயல்பட்டு சிறப்பாக சந்திரனை நிலவில் தரையை இறக்கி சாதித்துள்ளதாகவும் அவர்கள் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனை அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ரஜினி ஆதரவு என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் ’ரஜினி சார்பில் யாருக்கும் ஆதரவு இல்லை, இனிமேல் அவர் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை’ என்று தெரிவித்தார்.

மேலும் யோகி ஆதித்யநாத் மற்றும் ரஜினிகாந்த் 10 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருக்கிறார்கள் என்றும் சன்னியாசி காலில் விழுவது ஆசிர்வாதம் வாங்குவதில் தவறில்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

மேலும் ’ஜெயிலர்’ படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment