ரஜினிக்கு ஆளுநர் பதவியா? சகோதரர் சத்யநாராயண ராவ் தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,September 03 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயண ராவ் இன்று மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்கள் அவரைச் சுற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவற்றில் ஒன்று ’ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்குமா? என்பதுதான். அதற்கு பதில் அளித்த சத்யநாராயண ராவ், ‘எல்லாம் இறைவனின் கையில் தான் இருக்கிறது’ என்று கூறினார்.

சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்ற ரஜினிகாந்த், சென்னைக்கு திரும்பி வரும் வழியில் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உட்பட சில அரசியல் தலைவர்களை சந்தித்தார்.

மேலும் நேற்று சென்னையில் அவரை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சந்தித்தார். இந்த நிலையில் ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் ரஜினிகாந்த் சகோதரர் பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

நீங்க 12 கொலை பண்ணியிருக்கிங்க.. அதுவும் சின்னப் பொண்ணுங்க.. 'இறைவன்' டிரைலர்..!

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த 'இறைவன்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே 'நீங்க 12 கொலை பண்ணி இருக்கீங்க, அதுவும் சின்ன

'அவன் வந்துட்டான்'.. வேட்டையன் ராஜா பராக் பராக்.. லைகா வெளியிட்ட மாஸ் வீடியோ..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில், ஆஸ்கார் நாயகன் எம்எம்கீரவானி இசையில், லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி 2'.

'தளபதி 68' படத்தில் சம்பவம் செய்யும் யுவன்.. அறிமுகப்பாடல் இதுவா?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து

செப்டம்பர் 28 ரிலீஸ் பட்டியலில் இணைந்த விஜய் ஆண்டனி படம்.. 4 படங்கள் மோதல்..!

செப்டம்பர் 28ஆம் தேதி ஏற்கனவே மூன்று படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் விஜய் ஆண்டனியின் படமும் அதே தேதியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில்  கிச்சா சுதீப்.. பிரமாண்டமாக உருவாகும் திரைப்படம்..!

மிஸ்டர் பெர்ஃபெக்ட், ஸ்டைலிஷ் ஹீரோ மற்றும் பான் இந்திய நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய திரையுலக ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.