'கபாலி' சக்ஸஸ் மீட்: 6 நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வ தகவல்

  • IndiaGlitz, [Friday,July 29 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை எனினும் கலைபுலி எஸ்.தாணு, ரஞ்சித், தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வெற்றிவிழாவில் 'கபாலி' படம் 6 நாட்களில் அதாவது ஜூலை 22 முதல் 27 வரை உலகம் முழுவதும் ரூ320 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசுக்கு முன்னரே தயாரிப்பாளர் தாணு தெரிவித்தபடி இந்த படம் ரூ.500 கோடி வசூல் செய்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று முதல் மலேசியாவில் 'மலாய்' மொழியில் 'கபாலி' வெளியாகிறது. தாய்மொழியில் சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்க்க அந்நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளதால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.