உபி முதல்வர் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினிகாந்த்.. இதுதான் காரணம்..!

  • IndiaGlitz, [Sunday,August 20 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட நிலையில், அதனை அடுத்து அவர் ஜார்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தார். இதனை அடுத்து உத்தர பிரதேசம் மாநிலம் சென்ற ரஜினிகாந்த், அம்மாநில கவர்னர் ஆனந்திபென் அவர்களை சந்தித்தார். அதன் பிறகு உத்தர பிரதேச மாநில துணை முதலமைச்சர் உடன் ரஜினிகாந்த் மற்றும் லதா ஆகிய இருவரும் ’ஜெய்லர்’ படத்தை பார்த்தனர்

இந்த நிலையில் நேற்று இரவு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ஆசி பெற்றார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

51 வயது யோகி ஆதித்யநாத் கால்களில் 71 வயது ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெற்றது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி உள்ளது. ஆனால் யோகி ஆதித்யநாத் அவர்கள் முதலமைச்சர் மற்றும் அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் இந்து மத துறவி. தீட்சை பெற்றவர்.

சிறு வயதிலேயே கோரக்நாத் என்ற மடத்தில் ஐக்கியமானவர். பிற்காலத்தில் அந்த மடத்தின் தலைமை மடாதிபதி ஆகவும் உயர்ந்தார். இந்து மதத்தைப் பொறுத்தவரை மடாதிபதிகள் சிறு வயதினராக இருந்தாலும் அவர்களுடைய பதவிக்கு மரியாதை கொடுத்து காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தான் ஒரு முதலமைச்சர், அரசியல்வாதி என்ற வகையில் இல்லாமல் இந்து மத துறவி மற்றும் மடாதிபதி என்ற வகையில் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து வணங்கியதாக அவரது தரப்பினர் கூறுகின்றனர்.

More News

என் சொந்த ஊரில் இப்படி ஆகிவிட்டதே.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட மணிரத்னம் பட நாயகி..!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'உயிரே' திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது சொந்த மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் பலியானது

பிக்பாஸ் தமிழ் பிரபலம் நடிக்கும் 'என் எதிர ரெண்டு பாப்பா': நாயகியும் பிக்பாஸ் பிரபலம் தான்..!

 பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் நாயகனாக நடிக்க இருக்கும் நிலையில் அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை நாயகியாக நடிக்கும்  வெப் சீரிஸ் தான் 'என் எதிர ரெண்டு

'லியோ' இசை வெளியீட்டு விழா இந்த தேதியிலா? சென்னையா? மலேசியாவா?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட

உபி முதல்வரை சந்திப்பது இந்த சலுகையை பெறவா? செய்தியாளர் கேள்விக்கு ரஜினிகாந்த் பதில்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இரவு 7 மணிக்கு உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி நிலையில் முதல்வரிடம் சலுகையை

25 வயதில் சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள்..!

தமிழ் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகர் ஒருவர் 25 வயதில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது சின்ன திரை உலக நட்சத்திரங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.