தொண்டர் ஆரம்பித்த கட்சிக்கு தலைவர்: எம்ஜிஆர் பாணியில் ரஜினி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட்சியின் பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்றும் அக்கட்சிக்கு ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டதாகவும் இன்று அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த மக்கள் சேவை கட்சி என்பது ரஜினியின் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் ஆரம்பித்த கட்சி என்றும், அந்த கட்சியில் ரஜினி சேர்ந்து தலைவர் ஆகப்போவதாகவும் கூறப்படுகிறது. இது எம்ஜிஆர் பாணி என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதாவது எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற நிர்வாகி அனகாபுத்தூர் ராமலிங்கம் வைத்திருந்த அதிமுக என்ற அமைப்பில் எம்.ஜி.ஆர் தொண்டராக சேர்ந்து அதன்பின் அக்கட்சியின் தலைவரானார் எம்.ஜி.ஆர். அதே பாணியில், தனது ரசிகர் மன்ற நிர்வாகி ஸ்டாலின் என்பவர் பதிவு செய்துள்ள மக்கள் சேவை கட்சியில் சேர்ந்து அக்கட்சிக்கு தலைமை ஏற்கப்போகிறாரா ரஜினிகாந்த்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது
எம்.ஜி.ஆர் போன்ற ஆட்சியை தருவேன் என சொன்ன ரஜினி, கட்சி தொடங்குவதிலும் எம்.ஜி.ஆர் பாணியையே பின்பற்றுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout