தொண்டர் ஆரம்பித்த கட்சிக்கு தலைவர்: எம்ஜிஆர் பாணியில் ரஜினி!

  • IndiaGlitz, [Tuesday,December 15 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட்சியின் பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்றும் அக்கட்சிக்கு ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டதாகவும் இன்று அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த மக்கள் சேவை கட்சி என்பது ரஜினியின் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் ஆரம்பித்த கட்சி என்றும், அந்த கட்சியில் ரஜினி சேர்ந்து தலைவர் ஆகப்போவதாகவும் கூறப்படுகிறது. இது எம்ஜிஆர் பாணி என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதாவது எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற நிர்வாகி அனகாபுத்தூர் ராமலிங்கம் வைத்திருந்த அதிமுக என்ற அமைப்பில் எம்.ஜி.ஆர் தொண்டராக சேர்ந்து அதன்பின் அக்கட்சியின் தலைவரானார் எம்.ஜி.ஆர். அதே பாணியில், தனது ரசிகர் மன்ற நிர்வாகி ஸ்டாலின் என்பவர் பதிவு செய்துள்ள மக்கள் சேவை கட்சியில் சேர்ந்து அக்கட்சிக்கு தலைமை ஏற்கப்போகிறாரா ரஜினிகாந்த்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

எம்.ஜி.ஆர் போன்ற ஆட்சியை தருவேன் என சொன்ன ரஜினி, கட்சி தொடங்குவதிலும் எம்.ஜி.ஆர் பாணியையே பின்பற்றுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

கணவருடன் படப்பிடிப்புக்கு வந்த காஜல் அகர்வால்; மாலை மரியாதை செய்த படக்குழு!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றனர்

அன்பு குரூப்பை மீண்டும் உடைக்கின்றதா டாஸ்க்: ரியோ-அர்ச்சனா மோதல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாக அர்ச்சனா தலைமையிலான அன்பு குரூப் செயல்பட்டு வருவதாகவும் இந்த குரூப் தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை வீட்டிலிருந்து தந்திரமாக

நான் எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன்… வரலாற்று சேதி சொல்லும் கமல்ஹாசனின் அதிரடி டிவிட்!!!

நடிகர் கமல்ஹாசன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி அரசியல் பணி ஆற்றி வருகிறார்.

முடிவுக்கு வந்த அமெரிக்க அதிபர் தேர்தல்… அரியணையில் ஏறப்போகும் ஜனநாயகக் கட்சி!!!

கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது.

ஆத்திரமூட்டும் காரணம்… ஐபோன் தொழிற்சாலையை சூறையாடிய தொழிலாளர்கள்!!!

பெங்களூருவில் உள்ள தைவான் நாட்டிற்குச் சொந்தமான ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அதன் ஊழியர்களே சூறையாடிய சம்பவம் கடும் பரபரப்பை