close
Choose your channels

2.0-வுக்கு முன்பு ரிலீஸ் ஆகும் ரஜினி படம்

Tuesday, August 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படமான '2.0' திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ள நிலையில், 2.0 படத்திற்கு முன்பே ஒரு ரஜினி படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்த மாபெரும் மாஸ் படமான 'பாட்ஷா' படத்தை ஒருசிலர் இரண்டாம் பாகம் எடுக்க விருப்பம் தெரிவித்தபோதிலும் ரஜினிகாந்த் அதற்கு உடன்படவில்லை. அந்த படம் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.
இந்நிலையில் இந்த படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்ற தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் முடிவு செய்திருப்பதாகவும், புத்தம் புதிய வடிவில் புதிய டெக்னாலஜியில் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் 2.0 படத்திற்கு முன்பாகவே ரிலீஸ் செய்யவும் தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment