குடும்பத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா மட்டும் மிஸ்ஸிங் ஏன்?

  • IndiaGlitz, [Monday,February 07 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் குடும்பத்துடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மட்டும் மிஸ் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் தனுஷ் பிரிவதாக அறிவித்ததை அடுத்து ரஜினிகாந்த் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினிகாந்த் ஹோட்டல் திறப்பு விழாவுக்கு தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அவருடன் அவருடைய மனைவி லதா மற்றும் இளைய மகள் சௌந்தர்யா மட்டும் கலந்து கொண்டிருந்த நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஒரு மியூசிக் வீடியோவை இயக்கவிருக்கும் நிலையில் இந்த மியூசிக் வீடியோவில் படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதை அடுத்து அந்த பணிகளில் அவர் பிஸியாக இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.