கருணாநிதி உடல்நலத்தை விசாரித்த ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட அதிமுக அமைச்சர்கள், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட பலர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நேரிலும் தொலைபேசியிலும் விசாரித்து வருகின்றனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட பலர் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு கமல்ஹாசன், ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout