close
Choose your channels

இமயமலையில் இருந்தாலும் 'ஜெயிலர்' வசூலை அக்கறையாக விசாரிக்கும் ரஜினி.. சென்னை திரும்புவது எப்போது?

Wednesday, August 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியான நிலையில் அதற்கு முந்தைய நாள் அவர் இமயமலை சென்றார் என்பதும் இமயமலையில் இருந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பல வைரலாகியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆறு நாட்களாக நல்ல வசூல் செய்து வரும் நிலையில் இந்த வசூல் நிலவரத்தை அவ்வப்போது ‘ஜெயிலர்’ படக்குழுவினர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் ரஜினி அக்கறையுடன் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் இந்த படம் மிகப்பெரிய வசூல் செய்துள்ளது என்றும் குறிப்பாக வெளிநாட்டில் இந்த படத்தின் வசூல் அபாரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இன்று அல்லது நாளை இமயமலையில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்ப இருப்பதாகவும் அதன் பிறகு அவர் படக்குழுவினர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment