மக்களுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க: ரஜினியின் பாராட்டை பெற்ற டாக்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ்க்கு இன்னும் தடுப்பு மருந்து மற்றும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் அலோபதி மற்றும் சித்தா ஆகிய இரண்டு முறைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக அரசின் அனுமதி பெற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா நோயாளிக்ளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
டாக்டர் வீரபாபுவின் குழுவினர் இந்த மருத்துவ மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆவி பிடித்தல், சூரியக்குளியல், மூலிகை தேனீர், சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த சிகிச்சை முறையால் இதுவரை சுமார் 550 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், 200க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
இது குறித்த செய்திகளை பத்திரிகைகளில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சித்தா டாக்டர் வீரபாபுவை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். ;உங்களது சேவை சார்ந்த செய்திகளை தொடர்ந்து பார்த்து, படித்து வருகிறேன். கொரோனா பாதிப்பு நேரத்தில், மக்களுக்கு நல்லது செய்து வருகிறீர்கள். உங்களின் செயல்பாடுகள் ரொம்ப மகிழ்ச்சியாகவும், பிரமிப்பாகவும் உள்ளது. ரொம்ப ரொம்ப சந்தோஷம்; ஊரடங்கு முடிந்ததும், நாம் சந்திப்போம்' என்று ரஜினி பாராட்டி உள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த பாராட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி ஒத்துழைப்புடன் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு இந்த சேவையை செய்ய இருப்பதாகவும் டாக்டர் வீரபாபு தெரிவித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout