பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Thursday,May 31 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தூத்துகுடியிலும் சென்னையிலும் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, திடீரென ஆவேசப்பட்டு ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையை அவர் பேசியதால் பத்திரிகையாளர்கள் மனம் புண்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.

More News

ரஜினி கடைசி மூச்சு வரை கன்னடராக இருக்க வேண்டும்: கர்நாடக எம்.எல்.ஏ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் பிறப்பால் கன்னடராக இருந்தாலும்,

தவறான மனிதர்களை அடையாளம் காட்டிய காலச்சூழல்: ரஜினி குறித்து பாமக ராமதாஸ்

நேற்று தூத்துகுடி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் போராட வேண்டாம் என்றும், போராடும்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும்,

ஹாலிவுட் இயக்குனருடன் அரவிந்தசாமி ஒப்பிட்ட இளம் இயக்குனர் யார் தெரியுமா?

இளம் இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் இயக்கிய முதல்படமான 'துருவங்கள் பதினாறு' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவர் இயக்கிய படமான 'நரகாசுரன்' படத்தின் நாயகனாக அரவிந்தசாமி நடித்தார்.

ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் திடீர் முற்றுகை: பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தூத்துகுடிக்கு சென்று அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் போராட்டம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

'யார் நீங்க' என்று ரஜினியை கேட்டது ஏன்? தூத்துகுடி வாலிபர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோது சந்தோஷ் என்ற இளைஞர் ரஜினியை பார்த்து 'யார் நீங்க' என்று கேள்வி கேட்டது