கமல் குற்றச்சாட்டுக்கு ரஜினி கூறிய பதில்

  • IndiaGlitz, [Tuesday,March 20 2018]

தமிழக அரசியல் களத்தில் மிக விரைவில் குதிக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியை கிட்டத்தட்ட விமர்சனம் செய்யாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அவர் மீது விமர்சனங்கள் அள்ளி தெளிக்கப்படுகிறது ஆனால் தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் அல்லது ஒருசில நிமிடங்கள் பேட்டியில் தெளிவுபடுத்திவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் காவிரி விவகாரம் உள்பட பல விஷயங்களில் ரஜினி கருத்து கூறாமல் ஒதுங்கி போவதாக ரஜினியின் நெருங்கிய நண்பரும் சமீபத்தில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தவருமான கமல்ஹாசன் கூறியிருந்தார். ரஜினியின் நெருங்கிய நண்பரே அவரை விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் குற்றச்சாட்டு குறித்த கேள்வி ஒன்றுக்கு இன்று பதிலளித்த ரஜினிகாந்த், 'நான் முதலிலேயே காவிரி மேலாண்மை குறித்த என்னுடைய கருத்தை கூறிவிட்டேன். காவிரி மேலாண்மை குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், தமிழக அரசு இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளேன்' என்று கூறிய ரஜினி, கமல் விமர்சனம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

More News

என் பின்னால் இருப்பது ஒரே ஒருவர் தான்: சென்னை திரும்பிய ரஜினி

ரஜினி குறித்து பெரும்பாலானோர் செய்து வரும் விமர்சனம் அவரது பின்னால் பாஜக இருக்கின்றது என்பதுதான். இன்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இதற்கு பதிலளித்தார்.

யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு: கமல்ஹாசன்

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கிளம்பிய ராமராஜ்ய ரதயாத்திரை, அதன்பின்னர் மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம் உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்தது.

விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா? பிரபல தயாரிப்பாளர் கேள்வி

தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவின்படி மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை என்றும், மார்ச் 16ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது

சூப்பர் ஸ்டாரின் தங்கை கேரக்டரில் மியாஜார்ஜ்

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை மியா ஜார்ஜ்

சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல்: கணவர் இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் இருக்கும் சசிகலா, தனது கணவர் நடராஜன் இன்று காலை உடல்நலக்கோளாறால்