ஆர்.கே.நகரில் ஆதரவு யாருக்கு? ரஜினிகாந்த் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,March 23 2017]

கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தல் ரஜினியின் வாய்ஸ் காரணமாகவே ஆட்சி மாற்றம் நடந்ததாக கூறப்படுவதுண்டு. அதிலிருந்து தமிழகத்தில் ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும்போதும் அனைத்து ஊடகங்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு? என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கும். இருப்பினும் அவர் கடந்த சில தேர்தலில் தனது ஆதரவு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் வழக்கம்போல் அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ரஜினியை சந்தித்ததில் இருந்து அவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக ஒருசில தொலைக்காட்சிகளில் கூட விவாதம் நடந்தது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் தனது நிலை குறித்து ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். வரும் தேர்தலில் எனது ஆதரவு யாருக்கும் இல்லை' என்று அவர் கூறியுள்ளார். எனவே அவரது ரசிகர்கள் அவரவர் விருப்பம்போல் வாக்களிக்கலாம் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'இரட்டை இலை' முடக்கம். சுயேட்சை வேட்பாளர்களாக மாறிய டிடிவி தினகரன் - மதுசூதனன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை கட்டுக்கோப்பாக இருந்த அதிமுக, அவர் மறைந்த ஒருசில நாட்களில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக உடைந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் இரு அணிகளும் போட்டியிடுவதால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தன...

இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் விழாவில் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், தனது அறக்கட்டளையின் சார்பில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு கொடுப்பதற்காக 150 புதிய வீடுகளை கட்டியுள்ளது...

'நான் பிழைப்பேனா? தனுஷ் கேட்பது யாரிடம்?

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ஐதராபாத் மருத்துவமனையில் த்ரிஷா அனுமதியா? தாயார் உமாகிருஷ்ணன் விளக்கம்

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது கூட இளம் நடிகைகளுக்கு போட்டியாளராக உள்ளார். இவர் தற்போது 'மோகினி', 'சதுரங்க வேட்டை 2', 'கர்ஜனை', '1818', '96' போன்ற படங்களில் நடித்து வருகிறார்...

இரட்டை இலை முடக்கம். ஓபிஎஸ்-டிடிவி தினகரன் கருத்து

ஒன்றுபட்ட அதிமுகவின் மக்கள் செல்வாக்கு மிகுந்த சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக நேற்று நள்ளிரவு தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது. இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்த இரு அதிமுக அணிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அதிர்ச்சியை அளித்துள்ளது...