கொந்தளித்த ரஜினிகாந்த்: கோபத்துடன் புகைப்படம் வெளியீடு
Send us your feedback to audioarticles@vaarta.com
சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு அங்கு அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு காரணமாக தமிழகமே கொந்தளித்துப் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மதுரை ஐகோர்ட் கிளை தாமாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. மேலும் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரிக்க களம் இறங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களும் தங்களுடைய கருத்தை ஆவேசமாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து ஆவேசமாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். சத்தியமாக விடவே கூடாது என்ற தலைப்பில் அவர் கூறியுள்ள இந்த கருத்தில் ’தந்தையையும் மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும். விடக்கூடாது’ என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த கொந்தளிப்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments