தமிழ்நாடு சுடுகாடாகும்: பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் ஆவேசம்

  • IndiaGlitz, [Wednesday,May 30 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் அதன்பின்னர் பேட்டியளித்தார். அப்போது 'ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் போராட்டம் கலவரமாக மாறியது என்று கூறினார். ரஜினியின் இந்த கருத்தை திரித்து 'போராட்டம் செய்தவர்கள் எல்லோரும் சமூக விரோதிகளா? என ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியதோடு, மக்கள் போராட்டத்தை அவமதித்த ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினர்

இந்த நிலையில் சற்றுமுன்னர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம், 'ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறினீர்களே, அது எப்படி உங்களுக்கு தெரியும் என ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'எனக்கு எப்படி தெரியும் என்று கேட்க வேண்டாம், எனக்கு தெரியும் அவ்வளவுதான்' என்று கோபமாக கூறினார்.

மேலும் காவல்துறைக்கு நான் எப்போதும் சப்போர்ட் செய்வேன் என்றும் காவல்துறையினர்களை சமூக விரோதிகள் தாக்கியது தான் இந்த கலவரத்திற்கு காரணம் என்றும் கூறினார்

மேலும் எதற்கெடுத்தாலும் மக்கள் போராட்டம் போராட்டம் என்று சென்றால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்று ஆவேசமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

More News

'காலா'வுக்கு எதிராக போராட்டம்: டெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன்  7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு கர்நாடக மாநில திரைப்பட வர்த்தக சங்கம் தடை விதித்துள்ளது.

இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் #நான்தான்பாரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி 'சொல்வதெல்லாம் உண்மை' இந்த நிகழ்ச்சியை கலாய்த்து

யார் நீங்க? ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த தூத்துகுடி இளைஞர்

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறவும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும்

'காலா' படத்திற்கு தடை: கொந்தளித்த விஷால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. காவிரி பிரச்சனையில் ரஜினியின் குரல் தமிழகத்திற்கு ஆதரவாக இருந்ததால் கன்னட அமைப்புகள்