ரஜினி-விஜய்க்கு அழைப்பு விடுத்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி
- IndiaGlitz, [Saturday,May 28 2016]
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி நாளை புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனராக பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக, புதுச்சேரி விஐபிக்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் கிரண்பேடி அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே கவுல் அவர்கள் கிரண்பேடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.