ரஜினிகாந்த் - வெற்றிமாறன் கூட்டணியில் இந்த 2 பிரபலங்களும் இணைகிறார்களா?

  • IndiaGlitz, [Saturday,February 05 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் பலர் இருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ரஜினி படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானதை பார்த்தோம். ஆனால் அதே நேரத்தில் ரஜினியின் அடுத்த படமாக இந்த படம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் தற்போது சூரி நடிக்கும் ’விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இதனை அடுத்து சூர்யா நடிக்க உள்ள ’வாடிவாசல்’ படத்தையும் இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த இரண்டு படத்தையும் இயக்கி முடித்து விட்டுத்தான் ரஜினி படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று கூறப்படுகிறது

இது நிலையில் ரஜினிகாந்த் - வெற்றிமாறன் இணையும் திரைப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த், வெற்றிமாறன், இளையராஜா, தாணு ஆகிய நான்கு பிரபலங்களின் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது என கோலிவுட் திரையுலகினர் கூறுகின்றனர்.